டித்வா(Ditwa) பேரிடர் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
டித்வா(Ditwa) சூறாவளி தாக்கம் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று மாலை நிலவரப்படி 486 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த பேரிடரால் 341 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி, 51,023 குடும்பங்களைச் சேர்ந்த 171,778 பேர் இடம்பெயர்ந்து நாடு முழுவதும் நிறுவப்பட்ட 1,231 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 25 மாவட்டங்களிலும் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.





