வெளிநாடு ஒன்றில் சிக்கிய தவித்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மியன்மாரில் உள்ள முகாம்களில் இணைய குற்றங்களுக்காக பலவந்தமாக பயன்படுத்தப்பட்ட 20 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அவர்களில் 16 ஆண்களும் 4 பெண்களும் இக்குழுவைச் சேர்ந்தவர்களாகும். சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான நிறுவனம் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர தலையிட்டுள்ளது.
இந்த குழு மியான்மரில் இருந்து தாய்லாந்துக்கு, தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸின் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
வர்த்தக, மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று அவர்களின் தகவல்களைப் பதிவு செய்ததையடுத்து, குடிவரவுத் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிசார் அவர்களை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





