cஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் சஜித் பிரேமதாச இடையே கலந்துரையாடல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, பிரேமதாச அமைச்சர் கமிகாவாவிடம் நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து விளக்கியதுடன், சமகி ஜன பலவேகய (SJB) அதை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டினார்.
எதிர்வரும் தேர்தல்களை முன்னிலைப்படுத்தி இலங்கை அரசியலில் இந்த வருடத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தற்போதைய ஊழல் மற்றும் இரக்கமற்ற ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள் நேசமான நிர்வாகத்தை ஸ்தாபித்ததன் பின்னர், SJB எவ்வாறு நாட்டை புத்துயிர் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் விளக்கினார்.
(Visited 9 times, 1 visits today)