உலகின் பழமையான பிரமிட் இந்தோனேசியாவில் கண்டுப்பிடிப்பு!
கின்னஸ் உலக சாதனைகள் அதிகாரப்பூர்வமாக எகிப்தில் உள்ள ஜோசர் ஸ்டெப் பிரமிட்டை உலகின் மிகப் பழமையான பிரமிடு (கி.மு. 2,630) என்று பட்டியலிட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவில் உள்ள பிரமிட் மிகவும் பழைமையானதாக கூறப்படுகிறது.
இந்தோனேசியாவில் அமைந்துள்ள குனுங் படாங் என்ற பிரமிட்டின் அடுக்கு கிமு 25,000 இல் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த அமைப்பு மனிதனால் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தோனேசிய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த டேனி ஹில்மன் நடாவிட்ஜாஜா தலைமையிலான ஆராய்ச்சியில், வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்று தற்போது பலரையும் சிந்திக்கவைத்துள்ளது.
குறித்த கட்டுரையில் பிரமிட்டின் மையமானது மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட பாரிய ஆண்டிசைட் எரிமலைக் குழம்பைக் கொண்டுள்ளது” என்றும் பிரமிட்டின் “பழமையான கட்டுமான” உறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.
செதுக்கப்படுவதற்கு முன்பு ஒரு இயற்கை எரிமலைக் குன்றாக இது இருந்திருக்கலாம் எனவும் பின்னர் இது செதுக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆய்வு, கடந்த பனிப்பாறை காலத்துக்கு முந்தைய மேம்பட்ட கொத்துத் திறன்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஏறத்தாழ 11,000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தின் வருகையுடன் மட்டுமே மனித நாகரீகம் மற்றும் மேம்பட்ட கட்டுமான நுட்பங்களின் வளர்ச்சி தோன்றியது என்ற வழக்கமான நம்பிக்கையை இந்த கண்டுபிடிப்பு சவால் செய்கிறது.