எடின்பர்க் நகரத்தை விட மூன்று மடங்கு பெரிய மாயா நகரம் கண்டுப்பிடிப்பு!
எடின்பர்க் நகரத்தை விட மூன்று மடங்கு பெரிய மாயா நகரம், மெக்சிகோவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நகரம் பல நூற்றாண்டுகளுக்கு முன் மாயமானதாக நம்பப்படுகிறது.
மறைக்கப்பட்ட வளாகம் பிரமிடுகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் முதல் கண்கவர் அடையாளங்களால் விவரிக்கப்பட்டுள்ளன.
பண்டைய லத்தீன் அமெரிக்காவில் அறியப்பட்ட மிகப் பெரிய மாயா தளமான காலக்முலுக்கு அடுத்தபடியாக இந்த நகரம் இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கி.பி 750 முதல் 850 காலப்பகுதியில் ஏறக்குறைய 30,000 முதல் 50,000 பேர் இந்த நகரத்தில் வாழ்ந்திருப்பார்கள் என நம்பப்படுகிறது.
தற்போது வெளிவந்துள்ள படங்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி லேசர் முறையில் வரையப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.





