பேரிடர் சூழல் : 01 மில்லியன் இழப்பீடு அறிவிப்பு – பட்ஜெட் மீதான குழுநிலை விவாதம் ஒத்திவைப்பு!
கனமழையால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி நிதியத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) இதனை அறிவித்துள்ளது.
இதன்படி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பணம் விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி நிதியம் ஏற்கனவே செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பேரிடர் சூழ்நிலை காரணமாக வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைமை கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
குறித்த விவாதங்கள் டிசம்பர் ஒன்று மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம்பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.




