சிட்னியிலிருந்து சென்ற விமானத்தில் ஏற்பட்ட விபரீதம் – அவசரமாக தரையிறக்கம்
சிட்னியில் இருந்து ஒக்லாந்துக்கு புறப்பட்ட குவாண்டாஸ் விமானம் மீண்டும் சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இன்று காலை 7 மணியளவில் சிட்னியில் இருந்து புறப்பட்ட விமானம் பறவைகள் கூட்டத்துடன் மோதியதன் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை ஒக்லாந்துக்கு வருவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பு QF141 விமானம் இந்த ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டது.
இதன் காரணமாக சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் சிட்னி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
பறவைகள் மோதியதால் விமானத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதும், பயணிகளுக்கோ, பணியாளர்களுக்கோ காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதும் இதுவரை வெளியாகவில்லை.
விமானத்தில் உள்ள பயணிகளை வேறு விமானங்கள் மூலம் ஆக்லாந்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக குவாண்டாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.