வியட்நாமில் பேரழிவு : 12 பேர் மாயம்!! 270 மில்லியன் வரை இழப்பு!
தெற்கு மற்றும் மத்திய வியட்நாமில் பெய்த கனமழை மற்றும் பரவலான வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
235,000 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள அதேநேரம் 80,000 ஹெக்டேயர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் £270 மில்லியன் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக டக்லக் (Dak Lak) மாநிலம் அதிகமான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு சுமார் 60 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இராணுவம் மற்றும் மீட்பு குழுக்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர். அதேநேரம் ஆபத்தில் உள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 4 times, 4 visits today)




