சீனாவுடனான உறவை அமெரிக்கா துண்டிக்காவிட்டால் பேரழிவு வரக்கூடும் – எச்சரிக்கும் நிபுணர்

சீனாவுடனான உறவை அமெரிக்கா துண்டிக்காவிட்டால் பேரழிவு வரக்கூடும் என்று “சீனா இஸ் கோயிங் டு வார்” என்ற புத்தகத்தின் ஆசிரியரும் சீனாவின் உயர் நிபுணருமான கோர்டன் ஜி சாங் தெரிவித்துள்ளார்.
மேலும், இது அமெரிக்காவிற்கு எதிராக சீனா போர் செய்வதற்குச் சமம் எனத் தெரிவித்த அவர், இந்த பூஞ்சை COVID-19 ஐ விட மோசமானது என்றும், இதனால் அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், பூஞ்சை என்பது பல காலமாக அமெரிக்காவில் இருந்து வருகிறது என்றும், இதனால் ஏற்படும் அபாயம் குறைவாகவே இருக்கும் எனவும் அமெரிக்காவில் உள்ள விவசாயிகளும், நிபுணர்களும் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில்,கோதுமை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் மூலம் மனிதர்களுக்கு நோய்களைப் பரப்பும் அபாயகரமான பூஞ்சையை, அமெரிக்காவிற்குள் கடத்தியதாக சீன ஆய்வாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சீனாவைச் சேர்ந்த யூங்கிங் ஜியான் என்ற இளம்பெண் மற்றும் அவரின் காதலர் சுன்யோங் லியு அபாயகரமான கிருமியைக் கடத்திய புகாரில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர்.
ஃப்யூசேரியம் கிராமிநியரம் (Fusarium graminearum) என்ற அபாயகரமான பூஞ்சை மூலம் கோதுமை, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெட் பிளைட் (Head blight) என்னும் நோயைப் பரப்ப அவர் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியானது.