இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் இராணுவ தளபதிக்கு இடையே கருத்து வேறுபாடு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்காப்புப் படைத் தளபதி இயால் சமீரும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஸா விவகாரத்தைத் தொடர்ந்து, இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தளபதி சமீருக்கு அவரது கருத்தை வெளிப்படுத்தும் உரிமை இருப்பதைத் தெரிவித்தாலும், அரசாங்கம் எடுக்கும் முடிவுகளையே இராணுவம் செயல்படுத்த வேண்டும் என்றார்.
இஸ்ரேல், காஸாவை முழுமையாகக் கைப்பற்ற விரும்பும் நிலையில், போரில் அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்க பிரதமர் நெதன்யாகு இன்று பாதுகாப்பு அமைச்சரவையைச் சந்திக்கவுள்ளார்.
இதற்கிடையில், காஸா எல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காஸா தாக்குதல் திட்டம் பிணையாளிகளின் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் எனக் கவலை தெரிவித்தனர்.
(Visited 3 times, 3 visits today)