சில்லுனு ஒரு காதலை அழுது கெடுத்த ஜோதிகா…. இது என்ன புது கதையா இருக்கு
ஜோதிகாவின் அழுகை சில்லுனு ஒரு காதலை கெடுத்துவிட்டதாக இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் மின்னலே, காக்க உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிருஷ்ணா சில்லுனு ஒரு காதல் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
2006ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது அந்தப் படம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து அவளை இழந்திருக்கும் ஹீரோவுக்கும், காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் இருக்கும் ஹீரோயினுக்கும் பெரியவர்களால் திருமணம் செய்துவைக்கப்பட்ட பிறகு அவர்களுக்குள் மலரும் காதல் குறித்தும்; தனது கணவனுக்காக அவனுடைய பழைய காதலியை மனைவி அழைத்து வருவதும் என அந்தப் படத்தை இயக்கியிருந்தார் கிருஷ்ணா.
படத்தில் செம ஹைலைட்டாக இருந்தது என்னவென்றால் சூர்யாவின் பழைய காதலை டைரி மூலம் தெரிந்துகொள்ளும் ஜோதிகா சூர்யாவின் காதலியான பூமிகாவை வீட்டுக்கு வர வைப்பதுதான். அப்போது சூர்யா ஜோதிகாவிடம் எதற்காக பழைய காதலியை அழைத்து வந்தாய் என கேட்க நான் உன்னை காதலிக்கிறேன் என ஜோதிகா அழுதபடி சொல்வார். அந்த சீனை தியேட்டரில் பார்த்த பலரும் தங்களது அப்ளாஸை கொடுத்தனர். மேலும் இதுவரை தமிழ் சினிமாவில் பெரும்பாலும் தொடாத விஷயமாக அது பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த சீனில் ஜோதிகா அழுதபடி சொன்னது கிருஷ்ணாவுக்கு திருப்தியே இல்லையாம். அந்த சீனை எடுத்து முடித்த பிறகு ஜோதிகா அழுதபடி நடிப்பதை பார்த்து ஸ்பாட்டில் இருந்தவர்கள் கைத்தட்டி பாராட்டினார்களாம்.
கிருஷ்ணாவோ ஜோதிகாவிடம் இன்னொரு டேக் போகலாமா என கேட்க; ஜோதிகாவோ நான் இன்னொரு முறை செய்கிறேன் பிரச்னை இல்லை. ஆனால் இந்த டேக் வேண்டாம் என்பதற்கான காரணத்தை சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு கிருஷ்ணா, ‘இல்லை நீங்கள் காதலோடு தன் கணவரிடம் பழைய காதலியை விட்டுவிட்டு வெளியே செல்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் அழுதபடி சென்றால் அவர் எப்படி இருப்பார். ஏனென்றால் அவரும் உங்களை காதலிக்கிறார்’ என சொல்லியிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட ஜோதிகா அடுத்த டேக்கில் அழுகாமல் நடித்துக்கொடுத்தாராம்.
பிறகு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் ஆரம்பித்தபோது எடிட்டிங்கில் பார்த்து இந்த சீனுக்கு இரண்டாவது டேக் எடுத்திருப்பேன் அதை ஃபிக்ஸ் செய்யுங்கள் என்று கிருஷ்ணா கூற; அங்கிருந்தவர்களோ இல்லை முதலில் ஜோதிகா அழுதபடி நடித்ததுதான் சிறப்பாக இருக்கிறது என கூறி கிருஷ்ணாவை ஒத்துக்கொள்ள வைத்துவிட்டார்களாம்.
இருந்தாலும் கிருஷ்ணா எதிர்பார்த்தபடியே தியேட்டரில் அந்த சீன் வரும்போது சரியான ரெஸ்பான்ஸ் கிடைக்காமல் படத்தை கொஞ்சம் கெடுத்துவிட்டதுபோல் இருந்ததாம். இந்தனை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்..