இலங்கை செய்தி

தாக்குதல் பற்றி இலங்கைக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பியதா அமெரிக்கா?

“இந்து சமுத்திரத்தில் ஈரான் போர்க்கப்பல்மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவால் இலங்கைக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தப்படவில்லை.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்றது.

இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு,

“தாக்குதல் நடத்திய தரப்போ அல்லது தாக்குதலுக்கு உள்ளான தரப்போ எமக்கு எவ்வித தகவலையும் வழங்கவில்லை.

இரு நாடுகளுக்கிடையிலான போரின்போது ஒரு நாடுமீது நடத்தப்படவுள்ள தாக்குதலை மூன்றாம் தரப்பு நாட்டுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றில்லை.

கடற்படைக்கு இது பற்றி எவ்வாறு தகவல் கிடைத்தது என்பது குறித்து எனக்கு துல்லியமாக தெரியாது.

அந்தப் பகுதியில் சில சடலங்கள் மற்றும் உயிர் காக்கும் அங்கிகள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே எமது கடல்சார் மீட்பு நிலையத்திற்கு செய்தி கிடைத்தது.” – என்றார் அமைச்சர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!