விஜய் நடத்திய கூட்டத்தில் கயாடு லோஹரின் நண்பர் மரணம்?
நேற்று கரூரில் விஜய் நடத்திய அரசியல் பிரச்சார கூட்டத்தில் நடந்த நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். அவர்களில் 10 பேர் குழந்தைகள்.
இந்த நிலையில், நடிகை கயாடு லோஹர் பதிவிட்ட ட்விட்டர் பதிவு ஒன்று வைரல் ஆனது.
தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் இறந்துவிட்டார் எனவும், விஜய் சுயநல அரசியல் செய்கிறார் என தாக்கியும் அந்த பதிவு இருந்தது.
இந்நிலையில் கயாடு லோஹர் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். அது அவரது கணக்கே இல்லையாம். போலி X தள கணக்கு என அவர் கூறி இருக்கிறார்.

“அது போலி கணக்கு. எனக்கு அதில் எந்த தொடர்பும் இல்லை. அதில் வரும் பதிவுகள் என்னுடையது அல்ல.”
“எனக்கு கரூரில் நண்பர்கள் யாரும் இல்லை. என் நண்பர் இறந்துவிட்டதாக பரவும் செய்தி பொய்யானது. யாரும் நம்ப வேண்டாம்.”
“கரூரில் நடந்த சம்பவத்தால் நான் அதிகம் சோகமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள்” என கயாடு லோஹர் பதிவிட்டுள்ளார்.





