2023 ஆசிய ஜூனியர் தடகள போட்டியில் தங்கம் வென்ற தருஷி
தென் கொரியாவின் யெச்சியோனில் தற்போது நடைபெற்று வரும் 20 ஆவது ஆசிய 20 வயதுக்குட்பட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 இல், பெண்களுக்கான 800 மீ ஓட்டத்தில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்னா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
கஜகஸ்தானின் அக்பயன் நூர்மமெட் (2:10.22) 2:05.64 இரண்டாம் இடத்தையும், சீனாவின் யிங்யிங் கின் (2:11.14) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
தென் கொரியாவின் யெச்சியோனில் உள்ள யெச்சியோன் மைதானத்தில் ஜூன் 4-7 வரை நடைபெறும் 20 வது ஆசிய 20 வயதுக்குட்பட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 2023 இல் இலங்கையின் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
கருணாரத்ன பெண்களுக்கான 400 மீற்றர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், அதே போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஜெய்ஷி உத்தரா வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.
(Visited 17 times, 1 visits today)