தனுஷின் இட்லி கடை எப்படி இருக்கு?
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் இட்லி கடை. இப்படத்தில் தனுஷே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரனும், ஒண்டர்பார் நிறுவனம் சார்பாக தனுஷும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் இதில் சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே, இளவரசு, ராஜ்கிரண் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படம் ஆயுத பூஜை விருந்தாக இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
பலர்..
இட்லி கடை படத்தின் முதல் பாதி எமோஷனல் காட்சிகளாலும், விறுவிறுப்பான திரைக்கதையாலும் நிரம்பி உள்ளது. அருண் விஜய் – தனுஷ் இடையேயான மோதல் உடன் இண்டர்வெல் காட்சி முடிகிறது.
படம் நன்றாக கனெக்ட் ஆனது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் கழுகு காட்சி புல்லரிக்க வைத்தது. முழு படமும் முருகன் இட்லி கடையை சுற்றியே நகர்கிறது. தனுஷ் இயக்குனராகவும், நடிகராகவும் ஜெயித்திருக்கிறார்.

கிளைமாக்ஸில் தனுஷ் கொடுக்கும் இரண்டு நிமிட ஸ்பீச், அவரின் ரியல் வாழ்க்கையை பிரதிபளிப்பது போல் இருந்தது. கிராமத்து வாழ்க்கையை பற்றி படம் பேசுகிறது. சண்டை இல்லாமல், கலாச்சாரத்தோடு ஒன்றிய படமாக இது உள்ளது. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
சிலர்…
இட்லி கடை முதல் பாதி அருமை. தனுஷ் மற்றும் அருண் விஜய்யின் கதாபாத்திரங்கள் ஃபாரின் பின்னணியில் இருந்து தொடங்குகிறது. நித்யா மேனன் கேரக்டர் ரசிக்கும்படியும், கலகலப்பானதாகவும் உள்ளது.

மீண்டும் ஒருமுறை தனுஷ் தன்னுடைய நடிப்பால் உச்சம் தொட்டுள்ளார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் ஜொலித்துள்ளார். ஜிவி பிரகாஷின் மாண்டேஜ் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமை.
இண்டர்வெல் காட்சி படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஒரு பக்காவான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உள்ளது. குறிப்பாக சி செண்டர் ஆடியன்ஸுக்கு இப்படம் நன்றாக கனெக்ட் ஆகும். சிம்பிளான கதை மற்றும் திரைக்கதை. ஆனால் இயக்குனர் தனுஷ் அதை எமோஷன், ஃபன், லவ், ஆக்ஷன் உடன் பிரமாதமாக கொடுத்திருக்கிறார்.






