இலங்கை: பாராளுமன்ற விசாரணைக்கு முன்னிலையாகுமாறு தேசபந்துவுக்கு அழைப்பாணை

இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன், மே 19, 2025 அன்று அவரது நடத்தையை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளார்.
தென்னக்கோனின் அதிகார துஷ்பிரயோகச் செயல்கள் தொடர்பாக விசாரித்து அதன் கண்டுபிடிப்புகளை அறிக்கையிட நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன் தென்னக்கோன் அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தக் குழு இதுவரை பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடியுள்ளது, ஆனால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஐஜிபி தென்னக்கோன் நாடாளுமன்றக் குழுவின் முன் அழைக்கப்பட்டது இதுவே முதல் முறை.
(Visited 1 times, 1 visits today)