குர்ஆனை இழிவுப்படுத்துவது ரஷ்யாவில் குற்றமாகும்!! புடின் அறிவிப்பு
புனித குர்ஆனை இழிவுபடுத்துவது சில நாடுகளில் குற்றமாக பார்க்கப்படவில்லை, ஆனால் ரஷ்யாவில் அதற்கு தண்டனை விதிக்கப்படுகிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதன்கிழமை தெரிவித்தார்.
“எங்கள் நாட்டில், அரசியலமைப்பு மற்றும் தண்டனைச் சட்டத்தின்படி இது ஒரு குற்றம்” என்று அவர் கூறியுள்ளார்.
உக்ரேனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி, ரஷ்ய கூட்டமைப்பின் தாகெஸ்தான் தன்னாட்சிக் குடியரசில் உள்ள டெர்பென்ட்டுக்கு தனது விஜயத்தின் போது இந்த அறிக்கையை வெளியிட்டார்.
அங்கு, அவர் டெர்பென்ட்டின் வரலாற்று மசூதிக்கு விஜயம் செய்தார் மற்றும் தாகெஸ்தானில் இருந்து முஸ்லீம் பிரதிநிதிகளை சந்தித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு புனித குர்ஆன் பிரதி ஒன்று பரிசாக கிடைத்ததாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.
“குர்ஆன் முஸ்லிம்களுக்கு புனிதமானது, மற்றவர்களுக்கு புனிதமாக இருக்க வேண்டும்” என்ற அவர் இந்த விதிகளை நாங்கள் எப்போதும் கடைப்பிடிப்போம்.” என்றும் கூறியுள்ளார்.
புதன்கிழமையன்று ஸ்டாக்ஹோமின் மத்திய மசூதிக்கு வெளியே ஒரு நபர் புனித குர்ஆன் பிரதியை கிழித்து எரித்ததை அடுத்து புட்டினின் அறிக்கை வந்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்வீடனில் இஸ்லாத்திற்கு எதிரான தொடர் ஆர்ப்பாட்டங்கள் துருக்கி உட்பட முஸ்லிம் உலகை புண்படுத்தியுள்ளன, அதன் வெளியுறவு மந்திரி கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான போராட்டங்களை அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.