ஜெர்மனியில் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்
ஜெர்மனிய நாட்டில் அகதி கோரிக்கை சிக்கல் அடைந்து வரும் நிலையில் நாடு கடத்தல் நடவடிக்கை தீவிர நிலைக்கு செல்வதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கை காரணமாக ஜெர்மனியின் அதிதீவிரவாத வலது சாரி கட்சியான A F T கட்சியானது மக்களிடையே தற்பொழுது மிகவும் செல்வாக்குள்ள கட்சியாக வளர்ந்து வருகின்றது.
இந்நிலையில் ஜெர்மனியின் சமஷ்டி உள் ஊர் ஆட்சி அமைச்சர் நான்சி ஃவேசர் அவர்கள் ஜெர்மன் நாட்டில் அகதி விண்ணப்பத்தை மேற்கொண்டு இவ்வாறு அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுகின்றவர்களை நாடு கடத்தல் விடயத்தில் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருக்கின்றார்.
அதாவது இது வரை காலங்களிலும் இவ்வாறு நிராகரிக்கப்பட்ட அகதிகளை தற்காலிக தடுப்பு முகாமில் தடுத்து வைத்து அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்புகின்ற காலம் 10 நாட்களாகும்.
அதாவது 10 நாட்கள் வரை இவர்களை தற்காலிகமான தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்து அனுப்ப முடியும்.
அனால் புதிய சட்டத்தின் படி அரசாங்கமானது 28 நாட்கள் இவ்வகையாக அகதி விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்ட அகதிகளை தற்காலிக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறு தான் நாடு கடத்தலுக்கு எதிராக இவர்கள் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்து இருந்தால் அந்த மேல் முறையீடானது கைன அவுஷ்வியட்னிங் என்று சொல்லப்படுகின்ற சட்ட ரீதியான வலுப்பற்ற ஒரு மேன் முறையீடாக இருக்காது என்றும் இந்த புதிய சட்டம் கூறுவதாக தெரியவந்து இருக்கின்றது.