மூன்றாம் பாலினத்தவர்கள் அமெரிக்கா செல்லும் முன் அனுமதி பெறுமாறு டென்மார்க் கோரிக்கை!

மூன்றாம் பாலினத்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும்போது சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என்று ஜெர்மனி மற்றும் பின்லாந்து போன்ற பிற ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்க பயண ஆலோசனையை டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் மாற்றியுள்ளது.
அமெரிக்காவிற்குச் செல்வதற்கு முன்பு அவர்கள் அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
“அமெரிக்காவிற்கு ESTA அல்லது விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது, தேர்வு செய்ய இரண்டு பாலின பெயர்கள் உள்ளன: ஆண் அல்லது பெண்,” என்று டென்மார்க் பயண ஆலோசனை புதுப்பிப்பில் கூறியது.
உங்கள் பாஸ்போர்ட்டில் பாலின பெயர் X இருந்தால், அல்லது நீங்கள் உங்கள் பாலினத்தை மாற்றியிருந்தால், எவ்வாறு தொடர வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதலுக்காக பயணத்திற்கு முன் அமெரிக்க தூதரகத்தைத் தொடர்பு கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.