பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் டெங்கு வைரஸ் – WHO எச்சரிக்கை!
டெங்கு காய்ச்சல் அபாயம் அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றம் ஒரு காரணியாக உள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக 2023-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் ஏறக்குறைய சாதனை அளவை எட்டக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொசுக்களால் பரவும் நோய்த்தொற்றின் விகிதங்கள் உலகளவில் அதிகரித்து வருவதாகவும், 2000 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு எட்டு மடங்கு அதிகமாக வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்திய நிபுணர் டாக்டர் ராமன் வேலாயுதன் கருத்துப்படி, உலக மக்கள்தொகையில் பாதி பேர் டெங்குவால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டில் 5.2 மில்லியன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு உலகில் 4 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன, என்றார்.
புவி வெப்பமடைதல் கொசுக்கள் வேகமாக இனப்பெருக்கம் செய்ய உதவுவதாக நம்பப்படுகிறது, இதனால் டெங்கு வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.