உலகம்

ட்ரம்பின் பால்ரூம்(ballroom) திட்டத்திற்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி இடிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நீண்ட நாள் ஆசையான அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு ஜனாதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாக வெள்ளை மாளிகை உள்ளது.

இந்த மாளிகையின் கிழக்குப் பகுதி கட்டடம் 1902ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், வெள்ளை மாளிகையின் ஒருபகுதி இடிக்கப்பட்டு போல்ரூம் (ballroom) அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

இது அவரின் கனவு என்பதோடு நீண்ட நாள் விருப்பம் ஆகும். அவரின் ஆசையைப் பூர்த்தியாக்கும் விதத்தில் அதற்கான கட்டுமான பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இந்த போல்ரூம்(ballroom) ரூ.2200 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் “நாட்டின் ஒவ்வொரு ஜனாதிபதியும், வெள்ளை மாளிகை வளாகத்தில் மிகப் பிரமாண்ட விருந்துகள், கலைநிகழ்ச்சிகளுக்காக மக்களைத் தங்க வைக்க ஒரு பால்ரூம் வேண்டும் என்று 150 ஆண்டுகளுக்கும் மேலாகக் கனவு கண்டு வந்தனர்.

இந்தநிலையில் வரி செலுத்துவோருக்கு எந்த சிரமும் இன்றி, இந்த கனவை செயல்படுத்திய முதல் ஜனாதிபதி நான் என பெருமைப்படுகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 4 times, 4 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்