அமெரிக்காவில் பெருச்சாளியின் தோற்றம் கொண்ட உயிரினத்தை சாப்பிடுமாறு கோரிக்கை

அமெரிக்காவில் பெருச்சாளியின் தோற்றம் கொண்டுள்ள உயிரினத்தின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
அதனை கட்டுப்படுத்த அதைச் சாப்பிடலாம் என அந்நாட்டின் மீன், வனவிலங்குச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
‘nutria’ என்றழைக்கப்படும் அந்த உயிரினத்தை அமெரிக்காவின் ஈரநிலப் பகுதிகளில் காணலாம் என குறிப்பிடப்படுகின்றது.
அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஈரநிலப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதனைக் கருத்தில்கொண்டு அவற்றை வேட்டையாடிச் சமைத்து உண்ணலாம் என்று அமெரிக்க அமைப்பு கூறியது.
‘nutria’ சுமார் 20 பவுண்டு எடை கொண்டது. சிலர் அதன் சுவை கோழியைப் போன்றிருப்பதாகக் கூறினர். வேறு சிலர் அது சுவைக்க முயல் போன்றிருப்பதாகத் தெரிவித்தனர்.
(Visited 27 times, 27 visits today)