ஜெயிலர் படத்தில் அந்த காட்சியை நீக்க வேண்டும்… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஜெயிலர் படத்தில் வந்த முக்கிய காட்சி ஒன்றை நீக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் 10ம் தேதி வெளியான ஜெயிலர் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற திகார் சிறை ஜெயிலராக நடித்துள்ளார்.
ஜெயிலர் முதல் வாரத்திலேயே 300 கோடியை தாண்டி விட்டதாக அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வாக அறிவித்து இருந்தது. இரண்டாம் வாரத்தில் படத்தில் வசூல் சற்று சரிந்ததால் ஜெயிலர் திரைப்படம் இதுவரை மொத்தமாக 525 கோடியை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு: இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து முக்கியமான அந்த காட்சியை நீக்குமாறு படக்குழுவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது ஜெயிலர்’ படத்தில், ஆர்சிபி அணியின் ஜெர்ஸி அணிந்து நடிகர் ஒருவர் பெண்களுக்கு எதிராக சில கருத்துக்களை பேசி இருப்பார். இதுபோன்று எங்களின் ஜெர்சியை அணிந்து கொண்டு பேசுவதால், எங்கள் அணியின் நட்பெயர் கெட்டுப்போகும் என்று ஐபிஎல் அணியின் தரப்பில் இருந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங் செப்டம்பர் 1ஆம் தேதி முதல், அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்க கோரி தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
மேலும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் இந்த படம் ஒளிபரப்பாகும் போது இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.