புதுடெல்லியில் காற்றின் தரம் மேலும் வீழ்ச்சி
இந்திய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு மீண்டும் அபாய நிலையை எட்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 391-ஐ எட்டியுள்ள நிலையில், பல பகுதிகளில் இது 400-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
குறிப்பாக ஆனந்த் விஹார் மற்றும் ஷாதிபூர் பகுதிகளில் AQI அளவு 440-ஐ கடந்து ‘அதிக மோசம்’ என்ற பிரிவில் உள்ளது. காற்றின் வேகம் குறைவாக இருப்பதால், மாசு துகள்கள் வெளியேற முடியாமல் புகைப்படலமாகத் தேங்கியுள்ளன.
இதனால் பார்வைத் தெளிவு குறைந்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு இதே போன்ற மோசமான சூழலே நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.





