ஜெர்மனியின் பணி விசா வழங்கல் நடவடிக்கையில் தாமதம் – வெளிநாட்டவர்களுக்கு சிக்கல்

ஜெர்மனியில் Opportunity எனினும் வாய்ப்பு அட்டையை அறிமுகப்படுத்திய போதிலும், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கவும், அதிக வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கவும் நாடு போராடி வருவதாக ஒருங்கிணைப்பு மற்றும் இடம்பெயர்வுக்கான நிபுணர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்வேறு துறைகளுக்கு உதவ நாடு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில், வாய்ப்பு அட்டைக்கான தேவை குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று விசாக்கள் மெதுவாக வழங்குவதென தெரிவிக்கப்படுகின்றது
வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக ஜெர்மனிக்குள் நுழைய அனுமதிக்கும் விசாவைப் பெறுவதற்கான நீண்ட காத்திருப்பு நேரம் விண்ணப்பதாரர்களை ஊக்கப்படுத்துவதில்லை எனவும் இறுதியில் அது தொழிலாளர் சந்தையை பாதிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வாய்ப்பு அட்டை ஜெர்மனியில் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறையை தீர்க்க உதவுவதன் மூலம் மக்கள் வேலை தேட நாட்டிற்குள் நுழைவதை எளிதாக்குகிறது.
அதற்கான தேவை இன்னும் குறைவாக இருப்பதற்கு விசாக்களை வழங்குவதற்கான நீண்ட செயல்முறை ஒரு தடையாகும்.