இலங்கையை அச்சுறுத்தும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது பொத்துவிலுக்கு கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது நாளை மாலை யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
குறிப்பாக மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் தற்காலிகமாக சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், கடலோர மற்றும் தாழ்நில மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





