ChatGPT மீதான ஆர்வம் குறைந்தது – கைவிடும் பயனாளர்கள்
ChatGPT இணையத்தளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.
OpenAI நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்திய இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ChatGPTயை ஒருமுறையேனும் பயன்படுத்தாதவர்கள் யாருமில்லை என்ற அளவுக்கு அது பிரபலமானது.
Similarweb எனும் ஆய்வுநிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ChatGPT இணையத்தளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து 3ஆவது மாதமாக குறைந்து வந்துள்ளது.
அதற்கமைய, மக்களின் ஆர்வம் ஜூன் மாதம் சுமார் 10% குறைந்தது, ஜூலை மாதம் சுமார் 10% சரிந்தது மற்றும் ஒகஸ்ட் மாதம் சுமார் 3% குறைந்ததென புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளது.
எனினும் அந்தப் போக்கு முடிவுக்குவரும் அறிகுறி தெரிவதாக நிறுவனம் குறிப்பிட்டது. ChatGPTஐ இணையவாசிகள் பயன்படுத்திய நேரமும் கடந்த சில மாதங்களில் குறைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் சராசரியாக 8.7 நிமிடமாக இருந்த அது, ஆகஸ்ட் மாதம் 7 நிமிடத்துக்குக் குறைந்தது.