Site icon Tamil News

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்க

இலங்கையில் கடந்த 5 வருடங்களில் 100,000க்கும் அதிகமான பிறப்புகள் குறைந்துள்ளதாக மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலைமையால், முதியோர் சமூகம் அதிகரிப்பதன் மூலமும், இளம் சமூகம் குறைவதன் மூலமும் நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படக்கூடும் எனவும் வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

2017ஆம் ஆண்டு, இந்த நாட்டில் பிறந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரம்ாகும்.

இது 2023ஆம் ஆண்டு 2 லட்சத்து 47 ஆயிரமாக குறைந்துள்ளது.

மேலும், 2017 ஆம் ஆண்டில், வருடாந்த இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரமாக இருந்தது, ஆனால் அது 2023 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 80ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக மகப்பேறு மருத்துவர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலைமையால், எதிர்காலத்தில் நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படக்கூடும், இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என, மகளிர் மருத்துவ நிபுணரும், மகப்பேறு மருத்துவருமான சனத் லனரோல் தெரிவித்துள்ளார்.

Exit mobile version