தென் கொரிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை அரிசி
தென் கொரிய விஞ்ஞானிகள் குழு புரத செல்கள் கொண்ட புதிய அரிசி வகையை உருவாக்கியுள்ளனர்.
இது சாதாரண அரிசியைப் போலவே இருந்தாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த அரிசியில் மாட்டிறைச்சி செல்கள் மற்றும் கொழுப்பு செல்கள் உள்ளன.
வெளிநாட்டு ஊடகங்களின்படி, இந்த செயல்முறையின் போது எந்த விலங்குகளும் பாதிக்கப்படவில்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எதிர்காலத்தில் பல இறைச்சி பிரியர்களுக்கு அவர்களின் புதிய வகை அரிசி ஒரு அற்புதமான உணவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விஞ்ஞானிகள் இந்த அரிசியில் மாட்டிறைச்சியின் ஊட்டச்சத்து தரத்தையும் சேர்க்க முடிந்தது.
(Visited 19 times, 1 visits today)