கினியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட மோதலில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு
ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு கினியாவில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடந்த மோதலில் சுமார் 135 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது கினியாவின் இரண்டாவது பெரிய நகரமான N’Zerekore இல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “கினியாவின் N’Zerekore-இல் ஞாயிற்றுக்கிழமை கால்பந்து போட்டியொன்று நடைபெற்றுள்ளது.
அந்த போட்டியில் நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவால் வன்முறை தொடங்கிய நிலையில் இதையடுத்து, ரசிகர்கள் மைதானத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் உள்ள அனைத்து இடங்களிலும் உடல்கள் கிடப்பதாகவும் மற்றும் பிணவறை நிரம்பியுள்ளதாகவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)