மலைப்பாம்பின் வயிற்றில் நான்கு பிள்ளைகளின் தாயின் சடலம் கண்டெடுப்பு
நான்கு பிள்ளைகளின் தாய் துரதிஷ்டவசமாக மலைப்பாம்புக்கு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய இந்தோனேசியாவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவில் வசித்து வந்த 45 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை இரவு காணாமல் போன பெண் வீடு திரும்பாததால், கிராம மக்கள் அவரைத் தேடியதாக அவரது கணவர் தெரிவித்தார்.
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது, இந்த பெண்ணின் உடமைகள் கண்டெடுக்கப்பட்டதுடன், தொடர் நடவடிக்கையின் போது, பெரிய வயிற்றுடன் மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டது.
பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட மலைப்பாம்பின் வயிற்றை வெட்ட குழு ஒப்புக்கொண்டது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தோனேசியாவில் மலைப்பாம்புகளால் பல மனித இறப்புகள் நிகழ்ந்துள்ளன.





