சீதுவையில் பயணிகள் பையில் வைக்கப்பட்டிருந்த சடலம் கண்டுப்பிடிப்பு

சீதுவ, தண்டுகம ஓயாவில் பயணப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சடலத்தை பயணப் பையில் வைத்து யாரோ ஒருவர் தண்டுகம ஓயாவில் விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார், யார் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது தொடர்பில் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் உடனடியாக மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 14 times, 1 visits today)