இலங்கை

தனுஷ்க குணதிலக்க வழக்கில் நாளை தீர்ப்பு

அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாளை வியாழக்கிழமை (செப். 28) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

பெண்னொருவர் மீதான வன்புனவு தொடர்பில் அவுஸ்திரேலியாவில் கைதான தனுஷ்க மீதான வழக்கு விசாரணையின் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

சிட்னி நகரின் டவுனிங் செண்டர் மாவட்ட நீதிமன்றத்தில் குணதிலக்க மீதான வழக்கு விசாரணை இடம்பெற்றது

இதில் குணதிலக்க மற்றும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணும் முன்னிலைச் சாட்சியம் அளித்தனர்.

குணதிலக்கவுக்கு எதிராக ஆரம்பத்தில் நான்கு குற்றச்சாட்டிக்கள் பதிவு செய்யப்பட்ட போதும் அதில் மூன்று குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டு மாத்திரம் அவர் மீது நீடிக்கின்றது.

இதில் பாலியல் தாக்கத்துக்கு இலக்கானதாக கூறப்படும் பெண், ஆணுறை அணியாமல் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு தாம் ஏமாற்றப்பட்டதாகவும் அந்த தருணத்தில் தனது உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என அஞ்சியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு இறுதியில் அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற ரி-20 உலகக்கிண்ணத்துக்காக இலங்கை அணியுடன் சென்ற போது குணதிலக்க மீது இந்த குற்றச்சட்டு சுமத்தப்பட்டது.

ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரருக்கு எதிராக கற்பழிப்பு உட்பட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், மற்ற அனைத்து குற்றச்சாட்டுகளும் ஒருபுறம் கைவிடப்பட்டுள்ளன.

கிரிக்கெட் வீரருக்கு எதிரான ஒற்றை குற்றச்சாட்டு தொடர்பாக நீதிபதி சாரா ஹகெட் தனது முடிவை நாளை வழங்குவார்.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்