காத்திருக்கும் ஆபத்தான போர் – இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை
நீண்ட ஆபத்தான போர் நடக்கப்போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெட்டன்யாஹு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய ராணுவம் நாட்டின் தெற்குப் பகுதிக்கு ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்புகிறது. காஸா வட்டாரத்திற்கு அருகே வசிக்கும் இஸ்ரேலியர்கள் அனைவரையும் 24 மணி நேரத்திற்குள் அங்கிருந்து வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.
இதுவரை பூசல்களில் 250க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமுற்றதாகவும் இஸ்ரேலின் தேசிய மீட்புச் சேவை கூறுகிறது.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் குண்டுவீச்சு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் வசமுள்ள பகுதியை நோக்கி குண்டுகளையும் ஏவுகணைகளையும் பாய்ச்சியதாக ஈரான் ஆதரவு கொண்ட லெபனானின் ஹெஸ்பொல்லா (Hezbollah) குழு குறிப்பிட்டுள்ளார்.
சேதம் குறித்து உடனடித் தகவல் இல்லை. பாலஸ்தீனக் கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாக ஹெஸ்பொல்லா குழு கூறுகிறது.