உலகிற்கு 5 ஆண்டுகளில் காத்திருக்கும் ஆபத்து – ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை

உலகம் அடுத்த 5 ஆண்டுகளில் சந்திக்கவிருக்கும் வெப்பநிலை தொடர்பில் ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்த காலநிலை இதுவரை கண்டிராத ஆக வெப்பமானதாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக வானிலை ஆய்வு அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கையில் அந்த அதிர்ச்சி தரும் முன்னுரைப்பு வெளியானது.
2027ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலை, அதிகபட்சமாக உயரக்கூடிய ஒன்றரை டிகிரி செல்சியஸ் அளவை மிஞ்சுவதற்கான சாத்தியம், கிட்டத்தட்ட 65 விழுக்காடு என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வெப்பநிலை உயர்வு தற்காலிகமானதாக இருக்கும் என ஐக்கிய நாட்டு நிறுவனம் நம்புகிறது.
ஆனால், மேலும் அடிக்கடி, கடுமையான வெப்பம் நிலவலாம் என அது முன்னுரைத்தது.
(Visited 16 times, 1 visits today)