புயல் கரையை கடந்த பின்னும் பிரித்தானியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து!
பிரித்தானியாவை தாக்கிய சந்திரா புயலை தொடர்ந்து வெப்பநிலை சற்று உயர்ந்துள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பின்படி, இங்கிலாந்து முழுவதும் 76 வெள்ள எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
அத்துடன் 60 க்கும் மேற்பட்ட சொத்துக்கள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இங்கிலாந்தின் தென்மேற்கில் கனமழை பெய்யும் என்று வானிலை அலுவலகம் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக பயண இடையூறுகள் ஏற்படும் என்றும் அதிகாரிகள் முன்னறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





