இலங்கை: யோஷித்தவின் டேஸி பாட்டி கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பண மோசடி விசாரணை தொடர்பில் டெய்சி பாரஸ்ட் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.
டெய்சி பாரஸ்ட் விக்கிரமசிங்க இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பெப்ரவரி மாதம், சட்டமா அதிபர், யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி பாரஸ்ட் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில், பணமோசடி சட்டத்தின் கீழ் த்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
2016 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் யோஷித ராஜபக்சவால் நிதி தொடர்பில் திருப்திகரமான விளக்கங்களை வழங்க முடியவில்லை என கண்டறியப்பட்டதையடுத்து, பணமோசடி சட்டத்தின் கீழ் பொலிஸார் இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.
விசாரணையின் படி, டெய்சி பாரஸ்ட் விக்கிரமசிங்கவுடன் பேணப்பட்ட கூட்டுக் கணக்கு உட்பட நிலையான வைப்பு மற்றும் வங்கிக் கணக்குகளில் குறித்த நிதி வைக்கப்பட்டுள்ளது.