தமிழகத்தை உலுக்கிய பெஞ்சல் புயல் – மின்சாரம் தாக்கி மூவர் மரணம்
இந்தியாவின் தென் பகுதியை உலுக்கிய பெஞ்சல் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளார்.
மூவரும் சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தின் பேரிடர் நிர்வாக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் இம்முறைய புயல் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
வெள்ளம் பெருகி மரங்கள் விழுந்தாலும் அஞ்சிய அளவுக்குச் சேதம் இல்லை என கூறப்படுகின்றது.
மணிக்குச் சுமார் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியது. புயல் மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இந்தியாவின் மற்றப் பகுதிகளில் கனத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)