இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

திட்வா” புயல் எதிரொலி: இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை இடைநிறுத்த 120 நிபுணர்கள் அதிரடி கோரிக்கை

“திட்வா” புயலால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளை எதிர்கொள்வதற்காக இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளை உடனடியாக இடைநிறுத்துமாறு உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் 120 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph Stiglitz), இந்தியப் பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் மற்றும் தோமஸ் பிக்கெட்டி உள்ளிட்ட பல சர்வதேச வல்லுநர்கள் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையின் உள்கட்டமைப்புகள் மற்றும் வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கடன் மறுசீரமைப்புத் திட்டம் போதுமானதல்ல என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க புதிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு சர்வதேச சமூகத்திடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், இந்த அவசர நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) ஏற்கனவே 206 மில்லியன் டொலர் அவசரகால நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!