பிரித்தானியாவில் எளிதாக ஊடுருவிய சைபர் குழு – 158 ஆண்டுகள் பழமையான நிறுவனம் மூடல்!

பிரித்தானியாவில் பலவீனமான கடவுச்சொல்லை வைத்திருந்தமையால் 158 ஆண்டுகள் பழமையான நிறுவனம் ஒன்று மூடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் சுமார் 500 லாரிகள் மூலம் நாடு முழுவதும் பொருட்களை கொண்டும் செல்லும் சேவையை வழங்கி வந்தது.
அகிரா என்ற சைபர் கும்பல் இந்தக் கடவுச்சொல்லை எளிதாக யூகித்து நிறுவனத்தின் ஐடி அமைப்பில் ஊடுருவியது.
அதன் பிறகு, ஊழியர்கள் பயன்படுத்த முடியாத வகையில் நிறுவனத்தின் அனைத்து தரவையும் முடக்கினர். இந்தத் தரவை மீண்டும் அணுக, அவர்களிடம் பணம் கேட்கப்பட்டது.
ஆனால் நிறுவனம், கொடுக்க போதுமான பணம் இல்லாததால் நிறுவனம் இறுதியில் மூடப்பட்டது. அதன் 700 ஊழியர்கள் வேலை இழந்தனர்.
பிரிட்டனில் உள்ள பல முக்கிய நிறுவனங்கள் சமீபத்தில் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன.
(Visited 3 times, 1 visits today)