சைபர் தாக்குதல்கள் – ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு!
ரஷ்யா மற்றும் பிற விரோத நாடுகளிடமிருந்து அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்கள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்றுப்பட வேண்டும் என இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் ( Yvette Cooper) அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல்கள் தேசிய உள்கட்டமைப்பை பலவீனப்படுத்தவும், நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், ஜனநாயகங்களில் தலையிடவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
உக்ரைனின் எதிர்காலம் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய அமைதி திட்டம் குறித்து பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக உக்ரைனுக்கான ஆதரவை அழிக்க ஏஐ தொழில்நுட்பம் மூலம் சில போலியான காணொளிகள் தயாரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்து சுமார் 7.8 மில்லியன் சைபர் தாக்குதல்களைச் சந்தித்தாக சுட்டிக்காட்டிய அவர், அவற்றில் பல ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா போன்ற விரோத நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.




