இலங்கையில் அச்சக திணைக்கள இணையத்தளமும் பொலிஸாரின் யூடியூப் மீதும் சைபர் தாக்குதல்
இலங்கை பொலிஸ் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இப்போது அதன் கட்டுப்பாடு அதன் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிட்டது.
இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தனது முகநூல் பக்கத்தில் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதில் குழு (CERT) தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை கணினி அவசரகால பதில் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டு அதன் தரவுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)