விளையாட்டு

CWC – இலங்கை அணி படுந்தோல்வி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் குசால் பெராரா அதிரடியாக ஆடி 25 பந்தில் 2 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 51 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் போராடிய தீக்ஷனா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 3 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னர், ரவீந்திரா ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் அதிரடியாக ஆடினர்.

முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் கான்வே 45 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் ரவீந்திரா 42 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனுடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். 3வது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில் வில்லியம்சன் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், நியூசிலாந்து அணி 23.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ