சிறிதரனுக்கு வெட்டு: நாடாளுமன்ற குழு தலைவர் பதவி சாணக்கியனிடம் கையளிப்பு!
இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்றக் குழு தலைவராக இரா சாணக்கியன் எம்.பி. R. Chanakyan நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி பதவியை சிவஞானம் சிறிதரன் Sivagnanam Siridaran வகித்து வந்த நிலையிலேயே அவரிடமிருந்து அது பறிக்கப்பட்டு, சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், M.A. Sumanthiran இது தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
அரசியலமைப்பு பேரவையில் Constitutional Council உறுப்பினராக இருக்கும் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்படுகின்றார் என சுமந்திரன் தரப்பு குற்றஞ்சாட்டியது.
எனவே, அரசியலமைப்பு பேரவையில் இருந்து சிறிதரன் விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதனை ஏற்பதற்கு சிறிதரன் எம்.பி. மறுப்பு தெரிவித்தார்.
அரசியலில் இருந்து தன்னை ஓரங்கட்டுவதற்கு சதி நடப்பதாக சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்நிலையில் அவரை கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், தமிழரசுக் கட்சியின் தலைவர் இது பற்றி இன்னும் எதுவும் அறிவிக்கவில்லை. சிறிதரனும் இன்னும் தெளிவுபடுத்தலை வழங்கவில்லை.
இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் சிறிதரன் மற்றும் சுமந்திரனுக்கிடையில் கடும் பனிப்போர் நிலவுகின்றமை தெரிந்ததே.





