யாழ் போதனா வைத்தியசாலையில் CT Scan பரிசோதனைகள் இன்று முதல் மீண்டும் வழமைக்கு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் CT Scan பரிசோதனைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் இருந்த CT Scan இயந்திரம் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று முதல் பரிசோதனைச் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இயந்திரம் பழுதடைந்திருந்த காலப்பகுதியில் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது சேவைகள் வழமைக்கு திரும்பியமையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
மேலும் வைத்தியசாலை நிர்வாகம், இனி இடையூறுகள் இன்றி CT Scan பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.





