CT Match 08 – இங்கிலாந்து அணிக்கு இமாலய வெற்றி இலக்கு

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் 8வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
குர்பாஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த செதிக்குலா அடல் (4), ரஹமத் ஷா (4) ஆகியோரும் ஆர்ச்சர் பந்தில் வெளியேறினர்.
இப்ராஹிம் ஜத்ரன் சிறப்பாக விளையாடி 146 பந்தில் 177 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதன்மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனைப் படைத்தார்.
மேலும், ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற தனது முந்தைய சாதனையை முறியடித்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்தது.