6.2 மில்லியன் டொலருக்கு விலைபோன வாழைப்பழ கலைப்படைப்பை சாப்பிட்ட கிரிப்டோ தொழிலதிபர்

நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஏலத்தில் 6.2 மில்லியன் டொலருக்கு விலைபோன சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழத்தை சீன தொழிலதிபர் ஜஸ்டீன் சன் உட்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற சோத்பியின் ஏலத்தில் வெள்ளை சுவரில் டேப்பால் ஒட்டப்பட்ட ஒற்றை வாழைப்பழத்தைக் கொண்ட “காமெடியன்” எனப்படும் கலைப்படைப்பு விற்கப்பட்டது.
இதனை சீனாவில் பிறந்த தொழில்முனைவர் மற்றும் கிரிப்டோகரன்சியில் முன்னோடியான ஜஸ்டின் சன் என்பவர், காமெடியன் கலைப்படைப்பை சுமார் 6.2 மில்லியன் டொலர் என்ற அதிர்ச்சி விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன் பிறகு, கலைப்படைப்பில் இடம்பெற்று இருந்த வாழைப்பழத்தை உட்கொள்ள போவதாகவும் தன்னுடைய திட்டத்தை ஜஸ்டின் சன் பொதுவெளியில் அறிவித்தார்.
இந்நிலையில், ஹாங்காங் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தொழிலதிபர் ஜஸ்டின் காமெடியன் வாழைப்பழத்தை கடித்து தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்.
அத்துடன், இது மற்ற வாழைப் பழங்களை விட மிகவும் சுவையாக உள்ளது. இது உண்மையில் மிகவும் நன்றாக இருக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தாலிய கலைஞர் மௌரிசியோ கட்டலன் உருவாக்கிய அசல் “காமெடியன்” படைப்பு, 2019 இல் ஆர்ட் பேசல் மியாமி பீச்சில் முதன் முதலில் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.