செய்தி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

ரஷ்யா -உக்ரைன் போரில் மொஸ்கோ மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.  இதன்காரணமாக எண்ணெய் விலையானது இன்று 3.4 சதவீதத்தால்  உயர்ந்துள்ளது.

இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் இப்போது  64.73 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

போர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், சமாதான ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்கவும் ட்ரம்ப் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft ) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு பொருளாதார தடைகளை விதிக்க ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்தே விலைகள் அதிகரித்துள்ளன.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி