தமிழ்நாடு

ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான் ஜர்னலிசம்… என் தவறை உணர்ந்து விட்டேன் ; சவுக்கு சங்கர் வாக்குமூலம்

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் பெண் பொலிஸார் குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.அதன் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி துணை பொலிஸ் சூப்பிரண்டு யாஸ்மின் பெண் பொலிஸார் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் பொலிஸில் புகார் கொடுத்தார்.திருச்சி பொலிஸார் கைது அதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருச்சி நீதிமன்ற வளாகம்

அதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் பொலிஸார் கைது செய்தனர். அதேபோன்று டெல்லியில் ஜெரால்டை கைது செய்து ரயில் மூலம் அழைத்து வந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.பின்னர் மாவட்ட கூடுதல் பொலிஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் சவுக்கு சங்கரை 7 நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தார் அதன் அடிப்படையில் கோவை ஜெயில் இருந்து சவுக்கு சங்கரை பெண் பொலிஸார் நேற்று முன்தினம் திருச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி பின்னர் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

பின்னர் நேற்று காலை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜ படுத்தப்பட்டார்.அப்போது சவுக்கு சங்கரின் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஏற்கனவே இந்த வழக்கில் கோவை பொலிஸார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.ஆகவே பொலிஸ் காவலுக்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கரை ஒருநாள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

சென்னையில் 3 புகார்; சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

அதைத் தொடர்ந்து அவரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் அழைத்து சென்றனர்.அங்கே விடிய விடிய பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது,பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதற்கு பின்னணியில் யார் யார்? கேட்டனர்.

அதற்கு பதிலளிக்கும் போது, யாரும் என்னை தூண்டவில்லை.ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான் ஜானலிசம். எடப்பாடி பழனிச்சாமி ஆளுங்கட்சியாக இருந்தபோது அவரை விமர்சனம் செய்துள்ளேன்.பெண் பொலிஸார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டேன். அது தப்புதான். அதை இப்போது உணர்ந்துள்ளேன் என கூறியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று பொலிஸ்காவல் முடிந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்த பின் மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பொலிஸார் ஆயத்தமாகி வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்