மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் கடும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குவாண்டாஸ் முனையத்தில் பயணி மற்றும் பையை முறையாக சோதனை செய்யாததால் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த பயணியை அடையாளம் காண பாதுகாப்பு படையினர் தற்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
மெல்போர்ன் விமான நிலைய அதிகாரிகள் அவர் புறப்படுவதைத் தடுக்க அனைத்து விமானங்களையும் தாமதப்படுத்தியுள்ளனர்.
இந்த பாதிப்பு காரணமாக மெல்போர்ன் விமான நிலையத்தில் நாள் முழுவதும் விமானங்கள் தாமதமாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)